உடுப்பியின் மெய்மயக்கவைக்கும் பேக்வாட்டர்ஸில் மிகச்சிறந்த ஹவுஸ் போட் அனுபவம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் அமைந்திருக்கும் உடுப்பி, கண்களை கவரும் அழகிய காட்சிகளுக்கும், வனவிலங்குகளுக்கும் பெயர்போனது. இருப்பினும், பலர் பஞ்சஜன்யா குரூஸ் அளிக்கும் சிறப்பான அனுபவத்தை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். நீர், பச்சை பசுமையான மரங்கள், எல்லையில்லாமல் விரிந்து பரவிக்கிடக்கும் வானம் ஆகியவற்றால் சூழப்பட்டு இருப்பதுடன், இந்த சுற்றுலா பட்டியலில் கூடுதலாக படகு சவாரியும் இடம்பெற்றிருக்கிறது.
உயர்ந்தோங்கி வளர்ந்து நிற்கும் பனை மரங்கள் சௌகரியமான நிழலை உருவாக்குவதினால் முழு குரூஸும் ஒருவித சுவாரஸ்யமான குதூகலமான அனுபவத்தை தருகின்றது. பேக்வாட்டர்ஸில் இருக்கும் இந்த படகுகள் சுற்றுலா பயணிகளை உடுப்பியிலிருக்கும் கிளாசிக் ஹவுஸ் போட்டில் சவாரி செய்ய அனுமதிக்கிறது, அங்கு ஸ்வர்ண நதி, சீதா நதி, கங்காவலி நதி ஆகிய நதிகள் கோடி பேங்க்ரேவின் டெல்டா பீச் கடற்கரையில், இணைகின்றது. குறிப்பாக படகோட்டத்தின் போது, இந்த மூன்று நதிகள் இணையும் மையப்பகுதி ஒரு மாயைப் போன்றதொரு பிம்பத்தை உருவாக்குகிறது, அதை படகில் இருந்தவாறே கண்டு ரசிக்க முடியும்.
பஞ்சஜன்யா குரூஸ் என்பது சகல வசதிகளும் அமைக்கப்பட்ட ஒரு படகு சவாரியாகும், இந்த ஹவுஸ் போட் சவாரி பொதுவான பயண அனுபவத்திற்கு ஒரு மாற்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குரூஸ் கர்நாடகத்தின் அமைதியான பேக்வாட்டர்ஸில் மெதுவாக மிதந்து சென்று அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பார்க்கும் வாய்ப்பை நமக்கு அளிக்கின்றது. இந்த ஹவுஸ் போட்டில் பெரிய படுக்கையறை, கழிவறை, ஏர் கண்டிஷனிங் உடனான கண்கவர் விளக்குகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குரூஸில் சமையலறையும் இருக்கின்றது. பஞ்சஜன்யா ஹவுஸ் போட்ஸ் சுற்றுலா பயணிகளுக்கு ஆடம்பரம் வாய்ந்த சவாரி அனுபவத்தை அளிப்பதாகவும், அவர்களது தரத்தில் ஒரு போதும் சமரசம் செய்யப்படாது என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.
படகிலிருந்து காணும் காட்சிகள் நம்மை சுற்றி வளர்ந்திருக்கும் இயற்கை அன்னையுடன் உலகின் மையப்பகுதியில் உட்கார்ந்திப்பது போன்றதொரு எண்ணத்தை உருவாக்கி நம்மை மகிழ்ச்சியில் திளைத்திட வைக்கும். பிரகாசமாக இருக்கும் கதிரவனுடன், பேக்வாட்டர்சிலிருந்து மெல்ல வீசும் மென்மையான காற்று உங்கள் உடலை தூய்மைப்படுத்தி, உங்களுடைய பதற்றத்தையும், மனஅழுத்தத்தையும் முற்றிலும் நீக்கி மனநிம்மதியை அளிக்கும். பஞ்சஜன்யா குரூஸ் உடுப்பியின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் மறக்கமுடியாததாக மாற்றிவிடும்.
பஞ்சஜன்யா குரூஸ் ஆறு வெவ்வேறு வகையான குரூஸ்களை மாறுபட்ட விலைகளில் கொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு பேக்கேஜ்களும் அற்புதமானவை, இருப்பினும், நீங்கள் அழகிய பேக்வாட்டர்ஸில் அன்னம் போல மிதக்கும் இந்த படகில் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறீர்களோ அதை பொருத்தும் விலையில் வேறுபாடு ஏற்படலாம். பஞ்சஜன்யா குரூஸ் முற்றிலும் தனித்துவம் வாய்ந்தவை, மேலும் நீங்கள் இதுப்போன்ற ஒரு அற்புதமான அனுபவத்தை இதுவரை பெற்றிருக்க முடியாது என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அபராமான காட்சிகள், உங்களுக்கு உடுப்பியின் மற்றோரு பக்கத்தை காட்டுவது மட்டுமின்றி வணிக சுற்றுலாவை பின்னுக்கு தள்ளி இயற்கை அன்னையின் தன்னிகரில்லா அழகினை ரசிக்கும் வாய்ப்பையும் முன்னிறுத்துகின்றது என்று கூறினால் அது மிகையாகாது.